/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வக்கீல் வீட்டில் திருடிய வாலிபர் போலீஸ் கஸ்டடியில் விசாரணை
/
வக்கீல் வீட்டில் திருடிய வாலிபர் போலீஸ் கஸ்டடியில் விசாரணை
வக்கீல் வீட்டில் திருடிய வாலிபர் போலீஸ் கஸ்டடியில் விசாரணை
வக்கீல் வீட்டில் திருடிய வாலிபர் போலீஸ் கஸ்டடியில் விசாரணை
ADDED : ஜூன் 24, 2025 01:58 AM
ராசிபுரம், ராசிபுரம் அடுத்த புதுப்பட்டியை சேர்ந்தவர் சந்திரன், 39; வக்கீல். தற்போது ராசிபுரம் கோரைக்காடு பகுதியில் வசித்து வருகிறார். கடந்த மே, 14ல் புதுப்பட்டிக்கு சென்றுள்ளார். இரண்டு நாட்களுக்கு பின் மாலை வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, இரண்டரை பவுன் தங்க காசு, தோடு, செயின் என மொத்தம், ஆறு பவுன் நகையை காணவில்லை.
இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், மே, 27ல் இவ்வழக்கில் தொடர்புடைய ஓசூரை சேர்ந்த அர்ஜூனன் மகன் தர்மலிங்கத்தை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு வாலிபரான, போச்சம்பள்ளியை சேர்ந்த பிரபு மகன் நிஷாந்த், 28, மற்றொரு வழக்கில் சேலம் மத்திய சிறையில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, கைது ஆணையை சிறையில் வழங்கியதுடன், கஸ்டடி எடுத்து நேற்று ராசிபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.