/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டாஸ்மாக் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
டாஸ்மாக் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 26, 2025 01:53 AM
நாமக்கல் :டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணி மற்றும் டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்கம் சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் நீதிநாயகம் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் சிவக்குமார், வி.சி.க., மைய மாவட்ட செயலாளர் நீலவானத்து நிலவன் ஆகியோர் பேசினர்.
காலிபாட்டில் திரும்ப பெறுவதற்கு தனியாக இடம் ஒதுக்கி, புதிய பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்தி அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். டாஸ்மாக் கடை செயல்படும் நேரத்தை மதியம் 2:00 முதல் இரவு 9:00 மணியாக குறைக்க வேண்டும்.
இறந்த பணியாளரின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர் மரணம் அடையும் போது அவரது குடும்பத்திற்கு காப்பீடு தொகை, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிடும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும்.
10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே கடையில் பணிபுரியும் பணியாளர்களை இடமாற்றம் செய்து, அனைத்து பணியாளர்களையும் சுழற்சி முறையில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.