/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஏரியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி ராசிபுரம்,
/
ஏரியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி ராசிபுரம்,
ADDED : செப் 26, 2025 01:53 AM
ராசிபுரம் வனத்துறை சார்பில், கோனேரிப்பட்டி ஏரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தமிழ்நாடு வனத்துறை சார்பில், பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை தொடர்ந்து, ராசிபுரம் வனச்சரகத்திற்குட்பட்ட ராசிபுரம் நகராட்சி, கோனேரிப்பட்டி ஏரி, மெட்டாலா வனப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில், 17 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது.
தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. ராசிபுரம் வனச்சரக அலுவலர் சத்யா தலைமையில், கோனேரிப்பட்டி ஏரியை சுற்றி நடந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
ராசிபுரம் சேர்மன் கவிதா சங்கர் தொடங்கி வைத்தார். நாவல், புங்கை, கொன்றை உள்ளிட்ட பலவகை மரக்கன்றுகள் நடப்பட்டன. ராசிபுரம் வனவர் தீபக், வனகாப்பாளர்கள் சுரேஷ், பாபு, பூவசரன், முரளிதரன், லொயோலா கல்லுாரி முதல்வர் ஜோஸ்பின் டெய்சி, பேராசிரியர் வெஸ்லி உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.