/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருநங்கைகள் தின விழா: 14 பேருக்கு கேடயம்
/
திருநங்கைகள் தின விழா: 14 பேருக்கு கேடயம்
ADDED : ஜூன் 25, 2025 01:27 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கைகள் தின விழா மற்றும் சிறப்பு முகாம், மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடந்தது.
எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், 14 திருநங்கைகளுக்கு சால்வை அணிவித்து, கேடயம் வழங்கி பாராட்டி பேசுகையில், ''நாமக்கல் மாவட்டத்தில், 40 வயதிற்கு மேல் உள்ள, 50 திருநங்கைகளுக்கு, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மாதம், 1,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், மூன்றாம் பாலினத்தவருக்கான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ சேவை மையம் செயல்பட்டு வருகிறது,'' என்றார்.
தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினிடம், 2025ம் ஆண்டிற்கான, 'சிறந்த திருநங்கை' விருது பெற்ற, நாமக்கல் திருநங்கை ரேவதி, 2 மூத்த திருநங்கைகள், 6 திருநங்கை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர், ஆட்டோ டிரைவர், முதல் திருநங்கை போலீஸ், முதல் திருநங்கை உயர்கல்வி தேர்ச்சி பெற்றவர் என பல்வேறு சாதனைகள் புரிந்த, 14 பேருக்கு சால்வை அணிவிக்கப்பட்டு, கேடயம் வழங்கப்பட்டது.
மகளிர் திட்ட அலுவலர் செல்வராசு, தொழிலாளர் துறை உதவி கமிஷனர் இந்தியா, மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா, திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர் ரியா உட்பட பலர் பங்கேற்றனர்.