/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காளப்பநாயக்கன்பட்டியில் வள்ளி கும்மி அரங்கேற்றம்
/
காளப்பநாயக்கன்பட்டியில் வள்ளி கும்மி அரங்கேற்றம்
ADDED : ஜூன் 23, 2025 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்.,ல் சிரகிரி வேலவா கலைக்குழு செயல்பட்டு வருகிறது.
இதன் ஆசி-ரியராக அனுசுயா தரணிபதி உள்ளார். இங்கு புதிதாக சேர்ந்த மாணவ, மாணவியர் இரண்டு மாதங்களில் வள்ளி கும்மி ஆட்-டத்தை முழுமையாக கற்றுக்கொண்டனர். அவர்கள், நேற்று முன்-தினம் இரவு, 7:00 மணிக்கு, காளப்பநாயக்கன்பட்டி புதுார் மாரி-யம்மன் கோவில் திடலில், வள்ளி கும்மி ஆட்டத்தை அரங்கேற்-றினர். நிகழ்ச்சியில், மாணவ, மாணவியரின பெற்றோர், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு வள்ளி கும்மி ஆட்டத்தை கண்டுக-ழித்தனர்.