/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாணவியை கடத்தி திருமணம் போக்சோவில் வாலிபர் கைது
/
மாணவியை கடத்தி திருமணம் போக்சோவில் வாலிபர் கைது
ADDED : ஜூன் 23, 2025 05:02 AM
சேந்தமங்கலம்: கொல்லிமலை, வளப்பூர் நாடு ஊராட்சியை சேர்ந்தவர் காசி-நாதன், 23; கூலித்தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவியை ஆசைவார்த்தை கூறி, நேற்று முன்தினம் கடத்திச்சென்று திருமணம் செய்தார்.
இதைய-றிந்து அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், வாழவந்திநாடு போலீசில் புகாரளித்தனர். புகார்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், காசிநாதனை தேடி வந்தனர்.இந்நிலையில், காசிநாதன், ராசிபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து மாணவியுடன் வசித்து வந்தது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார், மாணவியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்-தனர். காசிநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.