/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் நீரோடைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை
/
குன்னுார் நீரோடைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை
ADDED : மார் 26, 2025 08:47 PM
குன்னுார்; நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் நீர் மலைகள், வனங்கள் கடந்து நீரோடையாகவும், ஆறுகளாகவும் மாறி, சமவெளி பகுதிகளுக்கு முக்கிய நீராதாரங்களாக விளங்குகிறது.
அதில், குன்னுாரில் உள்ள நீராதாரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு அசுத்தமடைந்து வருவதுடன், ஆக்கிரமிப்புகளாலும் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், நடப்பாண்டு, உலக நீர் தினத்தையொட்டி, புரூக்லேண்ட்ஸ் வழியாக பாயும் ஓடையின் ஒரு பகுதியை சுத்தம் செய்ய, முதற்கட்ட மதிப்பீடு செய்து, பாரதிய ஜெயின் சங்கம், ரோபக் அமைப்பு ஆகியவை 'கிளீன் குன்னுார்' அமைப்பின் ஆதரவுடன், ஆரம்ப பணிகள் துவங்கியது.
பாரதிய ஜெயின் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'ஐ.நா.,வின் கூற்றுப்படி உலக நீர் தினத்தின் கருப்பொருளாக 'பனிப்பாறை பாதுகாப்பு', என்ற தலைப்பில் இந்த ஆண்டு கடைபிடித்து அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, வருகிறது. மலைகளில் உற்பத்தியாகும் நீர், குடிநீர், விவசாயம், தொழில், சுத்தமான ஆற்றல் மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு அவசியம்.
நீலகிரி மலைகளில் எந்த பனிப்பாறைகளும் இல்லை என்றாலும், அவற்றுக்கு சமமான சோலை புல்வெளிகள் சதுப்பு நிலங்கள் மற்றும் அவற்றிலிருந்து உருவாகும் ஏராளமான கரையோர அமைப்புகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைகளின் மேல் பகுதிகளின் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்பை சார்ந்துள்ளது. இதனால் நீராதாரங்கள் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,' என்றனர்.