/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோரம் காய்ந்த மூங்கில்கள் உடனடியாக அகற்றினால் ஆபத்தில்லை
/
சாலையோரம் காய்ந்த மூங்கில்கள் உடனடியாக அகற்றினால் ஆபத்தில்லை
சாலையோரம் காய்ந்த மூங்கில்கள் உடனடியாக அகற்றினால் ஆபத்தில்லை
சாலையோரம் காய்ந்த மூங்கில்கள் உடனடியாக அகற்றினால் ஆபத்தில்லை
ADDED : மார் 26, 2025 08:47 PM

கூடலுார்; 'கூடலுார் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் காய்ந்த மூங்கில்களால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
கூடலுார் பகுதியில், காட்டு யானைகளுக்கு மூங்கில்கள் முக்கிய உணவாகும். இங்கு, இயற்கையாகவும் மற்றும் வனத்துறையின் சார்பிலும், நடவு செய்த மூங்கில்கள் யானைகளின் உணவு தேவையை பெருமளவில் பூர்த்தி செய்து வந்தன.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலான மூங்கில்கள் பூ பூத்து, அவை மூங்கில் அரிசியாக உதிர்ந்த பின், காய்ந்து அழிந்துவிட்டது.
இவ்வாறு காய்ந்த மூங்கில்கள, அகற்றப்படாமல் அப்படியே இருப்பதால் வனத்தீ அபாயம் உள்ளது. குறிப்பாக, மார்த்தோமா நகர் முதல் தொரப்பள்ளி வரையிலான மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள காய்ந்த மூங்கில்கள், அகற்றப்படாமல் உள்ளன.
தற்போது, கோடைகாலம் துவங்கியுள்ளதால், சமூக விரோதிகளால் அங்கு வனத்தீ ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள காய்ந்த மூங்கில்களுக்கு, சமூக விரோதிகள் தீ வைக்கும் ஆபத்து உள்ளது. தீ வனப்பகுதியில் பரவ வாய்ப்புள்ளது. இதனை தடுக்க, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்,' என்றனர்.