/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் காங்., தொழிலாளர் யூனியன் மாநில கூட்டம்
/
குன்னுாரில் காங்., தொழிலாளர் யூனியன் மாநில கூட்டம்
குன்னுாரில் காங்., தொழிலாளர் யூனியன் மாநில கூட்டம்
குன்னுாரில் காங்., தொழிலாளர் யூனியன் மாநில கூட்டம்
ADDED : மார் 25, 2025 09:24 PM
குன்னுார்; தமிழக காங்., தொழிலாளர் யூனியன், 29வது மாநில பொதுக்குழு கூட்டம் குன்னுாரில் நடந்தது.
அதில், மாநில தலைவர் புவனேஸ்வரி தலைமை வகித்து பேசுகையில்,''கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான தொழிலாளர் சட்ட திருத்தத்தை அமல்படுத்தும் நடவடிக்கையை கைவிட கோரி, அனைத்து மத்திய சங்கங்கள், மே மாதம், 20 ல், நடத்தும் நாடு தழுவிய முழு வேலை நிறுத்தத்திற்கு, தமிழக காங்., தொழிலாளர் யூனியன் முழு ஆதரவு அளிக்கிறது, என்றார்.
தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், 100 நாள் வேலைவாய்ப்பை, 200 நாட்களாக உயர்த்தி, ஒருநாள் சம்பளம் 400 ரூபாயாக வழங்க வேண்டும்; அனைத்து கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், 5,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் ; கட்டுமான தொழிலாளர்களை போல், அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் சமமான பண பலன்கள் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில நிர்வாகிகள் சத்தியபாலன், கண்ணன் கோதண்டன், கணேஷ், நீலகிரி மாவட்ட தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.