/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நகர பகுதிகளில் சுற்றி வரும் கரடிகளால் பொதுமக்கள் பீதி
/
நகர பகுதிகளில் சுற்றி வரும் கரடிகளால் பொதுமக்கள் பீதி
நகர பகுதிகளில் சுற்றி வரும் கரடிகளால் பொதுமக்கள் பீதி
நகர பகுதிகளில் சுற்றி வரும் கரடிகளால் பொதுமக்கள் பீதி
ADDED : செப் 25, 2025 11:39 PM

ஊட்டி; மஞ்சூர் பஜாரில் கூட்டமாக கரடிகள் உலா வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மஞ்சூர் சுற்றுவட்டாரத்தில் காட்டெருமை, குரங்கு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
மலை காய்கறி தோட்டங்களுக்கு வனவிலங்குகள் படை எடுப்பதால் காய்கறி சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளது.
தேயிலை தோட்டங்களில் உலா வரும் காட்டெருமை, சிறுத்தையால் தொழிலாளர்கள் அச்சத்துடன் பணிபுரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கு இடையே அவ்வப்போது யானைகளும் வந்து செல்கிறது. தற்போது, கிராம மக்களுக்கு பெரும் பிரச்னையாக, கரடிகளும் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
குறிப்பாக, கிராமங்களில் உலாவும் கரடிகள் ஆட்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு கதவுகளை உடைத்து பொருட்களை சூறையாடி வருகின்றன.
சமீப காலமாக, மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் கோவில் வீடுகள் என பல இடங்களில் அடுத்தடுத்து கரடிகள் கதவுகளை உடைத்து பொருட்களை சூறையாடி வந்தது வனத்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் மஞ்சூர் பஜார் மையப் பகுதியில் மூன்று கரடிகள் நுழைந்து சில கடைகளை உடைத்து பொருட்களை சூறையாடி வருகிறது. இதேபோல, ஊட்டி குருசடி பகுதியில் நேற்றுகாலை தேவாலயத்தில் புகுந்த கரடியால், அங்கு பிரார்த்தனைக்கு வந்தவர்கள் அச்சமடைந்தனர்.
எனவே, வனத்துறையினர் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.