/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
அரசு நடுநிலைப்பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி
/
அரசு நடுநிலைப்பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி
ADDED : ஜூன் 08, 2025 01:36 AM

புதுக்கோட்டை,:செங்கல்பட்டு மாவட்ட நீதிபதியின் மகளை, திருக்கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், எல்.கே.ஜி., வகுப்பில் சேர்த்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கட்டளையில் வசித்து வரும், செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்துாரில் உள்ள முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரியும் முருகேசன், தன் மகள் புவனேஸ்வரியை, திருக்கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், எல்.கே.ஜி., வகுப்பில் சேர்த்தார்.
முருகேசன் கூறுகையில், ''அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல. நம் பெருமையின் அடையாளம் என்பதை நிரூபிக்கும் விதமாக நம் பள்ளியில் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
''தாய்மொழியில் கற்கும் கல்வி மட்டுமே, எந்த ஒரு சூழ்நிலையை சமாளிப்பதற்கும் சரியான முடிவை தானே எடுப்பதற்கும் உறுதுணையாக இருக்கும்,'' என்றார்.