sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

கழிப்பறை பணி முடியாததால் மாணவர்கள் சாலை மறியல்

/

கழிப்பறை பணி முடியாததால் மாணவர்கள் சாலை மறியல்

கழிப்பறை பணி முடியாததால் மாணவர்கள் சாலை மறியல்

கழிப்பறை பணி முடியாததால் மாணவர்கள் சாலை மறியல்


ADDED : ஜூன் 05, 2025 02:38 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 02:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:ஆலங்குடி அருகே கடுக்காக்காட்டில் பள்ளி மாணவ - மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கடுக்காக்காட்டில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 94 பள்ளி மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

இந்த பள்ளியில் புதிய கழிப்பறைகள் கட்டப்படுகிறது. கடந்த 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கட்டப்பட்டு வரும் புதிய கழிப்பறை பணிகள் நிறைவடையாததால், மாணவ - மாணவியர் சிரமம் அடைந்தனர்.

இதுகுறித்து, மாணவர்கள், தங்கள் பெற்றோர்களிடம் கூறினர்.

இதனால், ஆத்திரம்அடைந்த பெற்றோர், நேற்று தங்களது குழந்தைகளுடன் வெட்டன்விடுதி -- கருக்காக்குறிச்சி சாலையில் கடுக்காக்காட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வடகாடு போலீசார், அவர்களுடன் பேச்சு நடத்தினர். 15 நாட்களில் கழிப்பறை பணிகள் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், வெட்டன்விடுதி -- கருக்காக்குறிச்சி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us