ADDED : ஜூன் 05, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை:புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார், 23. புதுக்கோட்டை காந்தி நகரை சேர்ந்த முகிலன், 31. இருவருக்கும் இடையில் முன்விரோதம் இருந்துள்ளது.
இதில், தினேஷ்குமார் நண்பர்கள் கார்த்தி, ஜெயக்குமார், இருவரும் சேர்ந்து, முகிலனை மதுபோதையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தன் நண்பர்களுடன் வந்த முகிலன், தினேஷ்குமாரை அரிவாளால் தலையில் வெட்டி, அப்பகுதியில் உள்ள குளத்திற்குள் தள்ளியுள்ளார். இதில், தினேஷ்குமார் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரில், போலீசார் முகிலன் உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர்.