/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆபத்தான தனுஷ்கோடி கடலில் நீந்திய அமெரிக்கர் சிக்கினார்
/
ஆபத்தான தனுஷ்கோடி கடலில் நீந்திய அமெரிக்கர் சிக்கினார்
ஆபத்தான தனுஷ்கோடி கடலில் நீந்திய அமெரிக்கர் சிக்கினார்
ஆபத்தான தனுஷ்கோடி கடலில் நீந்திய அமெரிக்கர் சிக்கினார்
ADDED : மார் 25, 2025 07:25 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் ஆபத்தான கடலில் நீந்திய அமெரிக்காவைச் சேர்ந்தவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
அமெரிக்காவில் மிட்சிஸ்சிபி நகரை சேர்ந்தவர் லுாசிபேர் 42. பிரபல ஆன்மிக எழுத்தாளர். ராமாயணம், மகாபாரதம் போன்ற வரலாற்று காவியங்களில் ஆர்வம் கொண்ட இவர் சுற்றுலா விசா மூலம் உ.பி., பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவில் பங்கேற்றார்.
பின் இந்தியாவில் உள்ள முக்கிய புனித தலங்களை தரிசித்து வருகிறார். அதன்படி நேற்று மதியம் தனுஷ்கோடி வந்த இவர் ராமர் பாலம் எங்கு உள்ளது என அங்கிருந்தவர்களிடம் விசாரித்துள்ளார். அதற்கு உள்ளூர் மீனவர்கள் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை வரை உள்ள கடல் பரப்பை காட்டி உள்ளனர். மறுநிமிடமே அவர் ஆபத்தான தனுஷ்கோடி கடலில் குதித்து நீந்த துவங்கினார். அங்கிருந்த மரைன் போலீசார் இது ஆபத்தான கடல், விபரீதம் ஏற்படும் என அறிவுரை கூறி தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷனுக்கு அவரை அழைத்துச் சென்றனர். அவரிடம் விசாரித்த போலீசார் எச்சரித்து அனுப்பினர்.