/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாளை மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி
/
நாளை மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி
ADDED : செப் 25, 2025 11:17 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இ.சி.ஆர்., நான்கு வழிச்சாலை பிரிவில் நாளை (செப்.27) காலை 6:00 மணிக்குமாணவர்களுக்கான மிதிவண்டி போட்டி நடக்கிறது.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாவட்ட விளையாட்டு ஆணையம் சார்பில் நாளை மிதிவண்டி போட்டிகள் 13, 15, 17 வயது பிரிவுகளில் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் பங்கேற்க பள்ளி தலைமையாசிரியரிடம் கண்டிப்பாக வயது சான்றிதழ் பெறவேண்டும்.
இந்தியாவில் தயாரான சாதாரண கைப்பிடிகளை கொண்ட சொந்த மிதிவண்டி மற்றும் ஆதார் கார்டு, வங்கிப் புத்தக நகல் கொண்டு வரவேண்டும்.
மேலும் 13 வயது பிரிவு மாணவர்கள் 15 கி.மீ., மாணவிகளுக்கு 10 கி.மீ., மற்றும்15,17 வயது பிரிவுகளில் மாணவர்கள் 20 கி.மீ., மாணவிகள் 15 கி.மீ., என போட்டிகள் நடைபெறும்.
போட்டி நடைபெறும் இடத்திற்கு உரிய சான்றுகளுடன் நாளை காலை 6.00 மணிக்குள் மாணவர்கள் வரவேண்டும்.
இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000ம், 2ம் பரிசு ரூ.3000ம், 3ம் பரிசு ரூ.2000ம் மற்றும் 4 முதல் 10 வரை தலா ரூ.250 பரிசுத்தொகை காசோலையாகவோ அல்லது வங்கி மாற்று வழியில் வழங்கப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.