ADDED : செப் 25, 2025 11:17 PM
கமுதி: கமுதி அருகே கோட்டைமேடு பசும்பொன் திரு முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்ட நாள் விழா நடந்தது.
முதல்வர் தர்மர் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மாமல்லன் வரவேற்றார். மார்னிங் ஸ்டார் மகளிர் கல்லுாரிநாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஆண்டனி கார்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாட்டு நலப்பணி திட்டம் குறித்து எடுத்துரைத்தார்.
மை பாரத், விக்சிட் பாரத் வினாடி வினா போட்டிக்கு பதிவு குறித்து நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கஜேந்திரநாயகம் வழிகாட்டினார். உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முதுகுளத்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்ட நாள் விழா நடந்தது. முதல்வர் மணிமாறன் தலைமை வகித்தார். சரஸ்வதி நாராயணன் கல்லுாரி உதவி பேராசிரியர் முனீஸ்வரன் முன்னிலை வகித்தார்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் நிர்மல்குமார், நாகராஜ் ஏற்பாடு செய்தனர்.