/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
படகில் பயங்கரவாதி ஊடுருவலா? 7 நாட்களாகியும் போலீசார் திணறல்
/
படகில் பயங்கரவாதி ஊடுருவலா? 7 நாட்களாகியும் போலீசார் திணறல்
படகில் பயங்கரவாதி ஊடுருவலா? 7 நாட்களாகியும் போலீசார் திணறல்
படகில் பயங்கரவாதி ஊடுருவலா? 7 நாட்களாகியும் போலீசார் திணறல்
ADDED : அக் 20, 2025 11:17 PM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகில் வந்தவர் யார் என 7 நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.
அக்.,13ல் ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடற்கரையில் இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த பைபர் கிளாஸ் படகு ஒதுங்கியது. இப்படகை கைப்பற்றி மண்டபம் மரைன் போலீசார் விசாரிக்கின்றனர். இந்தப் படகில் மன்னார் பகுதியை சேர்ந்த ஒருவர் ஊடுருவி இருப்பதாகவும், அவர் இலங்கையில் குற்ற பின்னணி உள்ளவரா அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ளவரா என்ற விவரம் தெரியாமலும் போலீசார் தவிக்கின்றனர். சம்பவம் நடந்து 7 நாட்கள் ஆகியும் இதுவரை மர்ம ஆசாமியை பிடிக்க முடியவில்லை.