/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமானோர் தரிசனம்
/
ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமானோர் தரிசனம்
ADDED : அக் 20, 2025 11:18 PM

ராமேஸ்வரம்: தீபாவளியை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் திருப்பூர், கோவையில் பணிபுரியும் வட மாநில தொழி லாளர்கள் ஏராளமானோர் ராமேஸ்வரம் கோயிலில் குவிந்தனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் கொட்டும் மழையில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசை யில் காத்திருந்து நீராடினார்கள். பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் அவதி நேற்று தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு ஒருசில அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆட்டோக்கள், தனியார் வாகனங்களிலல் ரூ.1200 வரை கட்டணம் செலவிட்டு தனுஷ்கோடி சென்று வந்தனர்.

