/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மேலாண்மை குழுவிற்கு அடையாள அட்டை
/
மேலாண்மை குழுவிற்கு அடையாள அட்டை
ADDED : மார் 26, 2025 04:08 AM
திருவாடானை, மார்ச் 26-
திருவாடானை தாலுகாவில் செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.திருவாடானை தாலுகாவில் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என 112 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் மேலாண்மைக் குழுக்கள் 2024 ஆக.,ல் மறுகட்டமைப்பு செய்யப்பட்டது.
பள்ளி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இக்குழுவினருக்கு அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
பள்ளியின் தேவைகளின் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டமானது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் முன்னிலையில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
அப்பள்ளிகளில் 2024-2026ம் ஆண்டுக்கான பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை பள்ளியளவில் வழங்க கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி அடையாள அட்டை வழங்கும் பணிகள் நடக்கிறது என்றனர்.