/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
(சேர்க்கவும்) ஹிந்து வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
/
(சேர்க்கவும்) ஹிந்து வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
ADDED : மார் 26, 2025 04:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் ஹிந்து வித்யாலயா நர்சரி பிரைமரி பள்ளி ஆண்டு விழா நடந்தது. விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா நிறுவனர் தலைவர் எஸ்.வேதாந்தம் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கிரிஷா சேஷாத்திரி முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராமசுப்பு வரவேற்றார்.
முதல்வர் சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக முரளிதரன் அன்கோ ஆடிப் பார்மின் நிர்வாக பங்குதாரர் சிவசுந்தரேஸ்வரன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என்.கணேஷ் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.