ADDED : மார் 26, 2025 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : கடலாடி தாலுகா சிக்கல் ஊராட்சி தேவேந்திர குல வேளாளர் மக்கள் தங்களுக்கு அரசு வழங்கியுள்ள இடத்தில் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தினர்.
சிக்கல் தேவேந்திர குல வேளாளர் பொதுமக்கள் சார்பில் செந்துார் கந்தன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
இதில், பேய்குளம் குரூப்பில் உள்ள அரசு இடத்தில் 62 குடும்பங்களுக்கு கணினி பட்டா வழங்கப்பட்டுள்ளது.
எங்களுக்கு அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இலவச கான்கீரிட் வீடுகள் கட்டித்தர வேண்டும்.
அதற்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.