/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆன்-லைன் மோசடியில் இழந்த பணம் மீட்பு
/
ஆன்-லைன் மோசடியில் இழந்த பணம் மீட்பு
ADDED : செப் 25, 2025 11:24 PM
ராமநாதபுரம்: ஆன்-லைன்மோசடியில் இழந்த ரூ.2 லட்சத்து 51ஆயிரத்தை ராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த அனுசுயா தேவி தனது உறவினர் பெயரில் மகன் கல்விக்கு உதவித்தொகை வழங்குவதாக வாட்ஸ் ஆப் மூலம் பேசியவரை நம்பி ரூ.81 ஆயிரத்தை இழந்தார். இதே போன்று வசந்தகுமார் என்பவர் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை இழந்து விட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இவ்வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு இருவரின் பணமும் மீட்கப்பட்டது. இதையடுத்து ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் மீட்கப்பட்ட ரூ. 2 ல்டசத்து 51 ஆயிரம் பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்து, சிறப்பாக செயல்பட்ட சைபர் கிரைம் போலீசாரை பாராட்டினார்.