/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குடிநீர் குழாய் உடைந்துவீணாகும் தண்ணீர்
/
குடிநீர் குழாய் உடைந்துவீணாகும் தண்ணீர்
ADDED : மார் 26, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடிநீர் குழாய் உடைந்துவீணாகும் தண்ணீர்
தாரமங்கலம்:தாரமங்கலம் நகராட்சியில் உள்ள, 27 வார்டுகளுக்கு நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் சங்ககிரி சாலையில், தினசரி மார்க்கெட் அருகில் குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் வீணாகி பல நாட்களாக சாலையில் செல்கிறது. இந்த தண்ணீர் சாலை ஓரம் வியாபாரிகள் வைத்துள்ள கடைகள் முன் தேங்குகிறது. மேலும் சாலை வீணாகிறது. குடிநீர் குழாய் உடைப்பை, நகராட்சி அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.