/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஈரோடு - கரூர் தடத்தில் பராமரிப்பு ரயில் இயக்கத்தில் 5 நாட்கள் மாற்றம்

ADDED : செப் 19, 2025 01:48 AM
சேலம், சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: ஈரோடு - கரூர் தடத்தில் உள்ள பல்வேறு பாலங்கள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அதனால், செப்., 19(இன்று), 22, 25, 28, 30 ஆகிய நாட்களில் காலை, 7:20க்கு புறப்படும், திருச்சி - ஈரோடு பயணியர் ரயில், கரூர் வரை மட்டும் இயக்கப்படும். கரூர் முதல் ஈரோடு வரை ரத்து செய்யப்படுகிறது.
அதே நாட்களில் காலை, 5:10 மணிக்கு கிளம்பும் செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ், கரூர் வரை மட்டும் இயக்கப்படும். மறு மார்க்க ரயில், அதே நாட்களில், கரூரில் இருந்து புறப்படும். இரு மார்க்கங்களில், கரூர் முதல் ஈரோடு வரை ரத்து செய்யப்படுகிறது.
நாளை மாற்றம்
சேலம் ஜங்ஷனில் சிக்னல் மேம்படுத்தும் பணி நடக்க உள்ளது. இதனால் செப்., 20(நாளை) காலை, 6:00 மணிக்கு புறப்படும், மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில், மல்லுார் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்க ரயில், மதியம், 2:05க்கு சேலத்தில் கிளம்பு வதற்கு பதில், 2:20க்கு, மல்லுாரில் புறப்படும். இரு மார்க்கங்களில், சேலம் முதல் மல்லுார் வரை ரத்து செய்யப்படுகிறது.