/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளியில் சமூக விரோதிகள் அட்டகாசம் இடிந்த சுற்றுச்சுவரை கட்டுவதில் குழப்பம்
/
பள்ளியில் சமூக விரோதிகள் அட்டகாசம் இடிந்த சுற்றுச்சுவரை கட்டுவதில் குழப்பம்
பள்ளியில் சமூக விரோதிகள் அட்டகாசம் இடிந்த சுற்றுச்சுவரை கட்டுவதில் குழப்பம்
பள்ளியில் சமூக விரோதிகள் அட்டகாசம் இடிந்த சுற்றுச்சுவரை கட்டுவதில் குழப்பம்
ADDED : செப் 19, 2025 01:42 AM
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, சந்தைப்பேட்டையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆனால் பள்ளியின் மேற்கு, கிழக்கு சுற்றுச்சுவர் இடிந்து கிடக்கிறது.
இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர், பள்ளி மேலாண் குழுவினர் கூறியதாவது:
சுற்றுச்சுவர் இடிந்துள்ளதால் அதன் வழியே இரவில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தில் புகுந்து, அட்டகாசம் செய்கின்றனர். சத்துணவு சமையல் கூடத்தில் மது அருந்தி பார் போல் மாற்றி அசிங்கம் செய்கின்றனர். பனமரத்துப்பட்டி ஒன்றியம் மூலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடம், சத்துணவு கூடம் பராமரிக்கப்பட்டது. சமீபத்தில் டவுன் பஞ்சாயத்து எல்லையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள், அந்த பஞ்சாயத்து நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பள்ளி, ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ளதா, டவுன் பஞ்சாயத்திடம் ஒப்படைக்கப்பட்டதா என, தெரியாமல் குழப்பமாக உள்ளது. இதனால் சுற்றுச்சுவர் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படாமல் உள்ளதால், சமூக விரோதிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. சுற்றுச்சுவரை உயர்த்தி கட்ட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளிகளை, டவுன் பஞ்சாயத்திடம் ஒப்படைக்கும் திட்டம் நிலுவையில் உள்ளது. சந்தைப்பேட்டையில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளி, டவுன் பஞ்சாயத்து எல்லையில் உள்ளதால், ஒன்றிய நிதியை செலவிட்டு சுற்றுச்சுவர் கட்ட இயலாது' என்றார்.

