/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆம்புலன்சுக்கு வழி விட்ட துணை முதல்வர் வாகனம்
/
ஆம்புலன்சுக்கு வழி விட்ட துணை முதல்வர் வாகனம்
ADDED : செப் 17, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள துணை முதல்வர் உதயநிதி, நேற்று மாலை, 5:30 மணியளவில் தனது வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவருக்கு, 4 ரோடு பகுதியில் தி.மு.க., மற்றும் மக்கள், ஒருசேர திரண்டு வரவேற்பு அளித்தனர்.
அப்போது, அவரது வாகனத்துக்கு பின்னால், அவ்வழியாக ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வந்தது. அதையறிந்த உதயநிதி, தன் வாகனத்தை சாலையோரமாக நிறுத்தும்படி அறிவுறுத்தினார். அதன்படி, அவரது வாகனம் ஓரங்கட்டி நிறுத்தப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனம் சென்ற பின், துணை முதல்வர் வாகனம், சேலம் கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது.

