/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மரத்தில் பைக் மோதி விவசாயி உயிரிழப்பு
/
மரத்தில் பைக் மோதி விவசாயி உயிரிழப்பு
ADDED : செப் 10, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி, ஆத்துார், பைத்துாரை சேர்ந்த, விவசாயி அருணாசலம், 56. கடந்த, 5ல், கெங்கவல்லி அருகே, 74.கிருஷ்ணாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் சென்றுவிட்டு, திரும்பி பைத்துார் நோக்கி, ஹெல்மெட் அணியாமல் வந்துகொண்டிருந்தார்.
கடம்பூரில் வந்துகொண்டிருந்தபோது, சாலையோர மரத்தில் பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அருணாசலத்தை, மக்கள் மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

