/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாட்டி இறுதிச்சடங்கில் பேரன் மாயம்
/
பாட்டி இறுதிச்சடங்கில் பேரன் மாயம்
ADDED : செப் 20, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், வீராணம் அருகே சுக்கம்பட்டி, சின்னனுாரை சேர்ந்தவர் மலர்கொடி, 54. இவரது மகன் சதிஷ்குமார், 30. இவரது பாட்டி, சேலம், சின்னதிருப்பதியில் வசித்த நிலையில் இறந்துவிட்டார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க, சதிஷ்குமார் நேற்று முன்தினம் சென்றார்
அப்போது அங்கு சிலருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அங்குள்ள கூட்டுறவு சங்கம் அருகே அமர்ந்திருந்த சதிஷ்குமார், வீடு திரும்பவில்லை. மலர்கொடி புகார்படி, கன்னங்குறிச்சி போலீசார் தேடுகின்றனர்.

