/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழிலாளியை கத்திரிக்கோலால் குத்தியவர் கைது
/
தொழிலாளியை கத்திரிக்கோலால் குத்தியவர் கைது
ADDED : செப் 20, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல் தலைவாசல், மணிவிழுந்தான் காலனி, ராமானுஜபுரத்தை சேர்ந்த, கூலித்தொழிலாளி ராம்குமார், 28. இவர் வீடு அருகே வசிப்பவர் சரவணன், 26. இவரிடம், 'ஸ்பிளண்டர்' பைக்கை, 26,000 ரூபாய்க்கு, ராம்குமார் அடமானம் வைத்தார். நேற்று, 6,000 ரூபாய் மட்டும் கொடுத்து, பைக்கை கேட்டார்.
இதில் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சரவணன், கத்திரிக்கோலால் ராம்குமாரின் கை, மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். மக்கள் ராம்குமாரை, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தலைவாசல் போலீசார் சரவணனை கைது செய்தனர்.

