/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட 2 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
/
தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட 2 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட 2 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட 2 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
ADDED : செப் 19, 2025 01:24 AM
சேலம் :சேலம், கிச்சிப்பாளையம் கடம்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆசிக் அலி, 25. இவர் கடந்த மாதம், அதே பகுதியை சேர்ந்த மாதவனிடம், கத்தியை காட்டி மிரட்டி 5,000 ரூபாய் பறித்தார். கிச்சிப்பாளையம் போலீசார், ஆசிக் அலியை கைது செய்தனர். அவர் மீது அடிதடி, வழிப்பறி வழக்குகள் உள்ளதும், 2024ல் குண்டாஸில் கைதானதும் தெரியவந்தது.
அதேபோல் தாதகாப்பட்டி, தாகூர் தெருவை சேர்ந்த சீனிவாசன், 33, கடந்த மாதம் அம்பாள் ஏரி சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டபோது, அன்னதானப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, 1 கிலோ, 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே அவர் மீது கஞ்சா வழக்குகள் உள்ளன. இதனால் இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, சேலம் போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார்.