/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் இரவில் பெய்த கனமழை அடிக்கடி மின் தடையால் மக்கள் அவதி
/
சேலத்தில் இரவில் பெய்த கனமழை அடிக்கடி மின் தடையால் மக்கள் அவதி
சேலத்தில் இரவில் பெய்த கனமழை அடிக்கடி மின் தடையால் மக்கள் அவதி
சேலத்தில் இரவில் பெய்த கனமழை அடிக்கடி மின் தடையால் மக்கள் அவதி
ADDED : செப் 19, 2025 01:24 AM
சேலம் :சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில், சில நாட்களாக இரவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு, 7:00 மணிக்கு, சேலத்தில் சாரலாக தொடங்கிய மழை, தொடர்ந்து கன மழையாக மாறி, 9:00 மணி வரை பெய்தது.
பின் மீண்டும் சாரல் மழையாக மாறியது. இதனிடையே, நகரின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் தடைபட்டு, மக்கள் அவதிப்பட்டனர். சில இடங்களில் குறைந்த மின்சாரம் மட்டும் வந்ததால், 'டிவி', ப்ரிட்ஜ் போன்ற மின்சாதனங்கள் பழுதாகின.
அதேபோல் ஆத்துார், நரசிங்கபுரம், வாழப்பாடி, ஏற்காடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொட்டிய மழையில் அதிகபட்சமாக கெங்கவல்லியில், 75 மி.மீ., குறைந்தபட்சமாக சங்ககிரி, இடைப்பாடியில் தலா, 2 மி.மீ., பதிவானது. சேலத்தில், 5.5. மி.மீ., பெய்தது.