/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலை தடுப்புச்சுவரில் பைக் மோதி தொழிலாளி பலி
/
சாலை தடுப்புச்சுவரில் பைக் மோதி தொழிலாளி பலி
ADDED : செப் 19, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார் :காடையாம்பட்டி, பண்ணப்பட்டி, கெண்டையன்காட்டுவளவை சேர்ந்தவர் நாகராஜ், 34. கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இவர் நேற்று, சேலத்தில் உள்ள சித்தி இறப்பு நிகழ்ச்சிக்கு சென்றார். பின் மாலை, 4:30 மணிக்கு, 'ஸ்பிளண்டர்' பைக்கில், ஹெல்மெட் அணியாமல் வீடு நோக்கி புறப்பட்டார்.
புளியம்பட்டியை கடந்து தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் சென்றபோது நிலை தடுமாறி தடுப்புச்சுவரில் மோதினார். அதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் இறந்தார். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

