/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேலை கேட்பதுபோல் நடித்து மொபைல் திருடியவர் கைது
/
வேலை கேட்பதுபோல் நடித்து மொபைல் திருடியவர் கைது
ADDED : ஜூன் 25, 2025 01:35 AM
சேலம், சேலம், கிச்சிப்பாளையம் அருகே காளிகவுண்டர் காடு, பெரிய காளியம்மன் கோவிலை சேர்ந்தவர் அப்துல்லா வாகித், 25. எருமாபாளையத்தில் ஆட்டோ பட்டறை வைத்துள்ளார். நேற்று முன்தினம், பட்டறைக்கு வந்த ஒருவர், அப்துல்லா வாகித்திடம் வேலை கேட்டுள்ளார். அவர் இல்லை என கூறியதால், அந்த நபர் சென்றுவிட்டார். திரும்பி பட்டறைக்குள் வந்த நபர், அப்துல்லா வாகித்தின் 'ரெட்மி' மொபைல் போனை திருடிச்சென்றார்.
சிறிது நேரத்துக்கு பின், மொபைல் போனை காணாததால், அப்துல்லா வாகித் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்தனர். அதில் வேலை கேட்டு வந்த, கிச்சிப்பாளைம், ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த கண்ணன், 38, என்பவர் திருடியது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மொபைல் போனை மீட்டனர்.