/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குழந்தை விற்ற வழக்கில் மேலும் ஒருவர் சிக்கினார்
/
குழந்தை விற்ற வழக்கில் மேலும் ஒருவர் சிக்கினார்
ADDED : ஜூன் 25, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 44. இவரது மனைவி நாகசுதா, 28. இவர்கள் குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. இவர்களுக்கு கூட்டாளியாக, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஸ்ரீதேவி, 43. ஈரோடு பர்வீன், 42, பத்மாவதி, 46, ஜனார்த்தனன், 38, செயல்பட்டது தெரிந்தது.
இவர்களை நேற்று முன்தினம், போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரித்ததில், தலைமறைவாக இருந்த, சேலம், பனமரத்துப்பட்டியை சேர்ந்த சித்ரா, 38, என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதன்மூலம், இந்த வழக்கில் கைது எண்ணிக்கை, 7 ஆக உயர்ந்தது.