/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பா.ம.க., - வி.சி., கொடி கம்பங்கள் அகற்றம்
/
பா.ம.க., - வி.சி., கொடி கம்பங்கள் அகற்றம்
ADDED : ஜூன் 25, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், பொது இடங்களில் கட்சி, ஜாதி ரீதியான கொடி கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் முன் கடந்த, 3ல், நெடுஞ்சாலைத்துறை, ஓமலுார் டவுன் பஞ்சாயத்து சார்பில், 14 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.
அப்போது, பா.ம.க., - வி.சி., கட்சியினர் அவகாசம் கேட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று, நெடுஞ்சாலைத்துறை ஓமலுார் உட்கோட்ட உதவி இயக்குனர் கவிதா தலைமையில், பஸ் ஸ்டாண்ட் முன் இருந்த பா.ம.க., கொடி கம்பத்தை அகற்றினர். அதேபோல் வி.சி., கொடி கம்பத்தையும் அகற்றினர். அங்கிருந்த கொடி மேடைகளையும், பொக்லைன் மூலம் இடித்து அகற்றினர்.