/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவிலை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
/
கோவிலை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
கோவிலை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
கோவிலை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 25, 2025 01:37 AM
மேட்டூர், சேலம் மாவட்டம் ஓமலுார், மானாத்தாள் ஊராட்சி உப்பாரப்பட்டியில் அய்யனாரப்பன், கருப்பசாமி கோவில் உள்ளது.
அதன் பங்காளிகளாக, 2,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அங்கு, 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிேஷகம், 5 ஆண்டுக்கு ஒருமுறை தெவம் நடக்கும்.
ஆனால், கோவிலை பொறுப்பேற்று நடத்துவது தொடர்பாக, பங்காளிகளில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஓமலுார் தாசில்தார் பேச்சு நடத்தியதில், 'ஏ' தரப்பில், 7 பேர், 'பி' தரப்பில், 7 பேர் என பிரித்து, கோவில் நிர்வாகத்தை நடத்த அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் ஒரு தரப்பில் காணியாச்சிக்காரர்கள், 7 பேர், மற்றொரு தரப்பில் ஒருவர் மட்டுமே உள்ளனர். அதனால் இரு தரப்பு மோதலை தடுக்க, கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனக்கூறி, காணியாச்சிக்காரர்கள் மணிமாறன், ராமச்சந்திரன், செல்வராஜ், சில பெண்கள் உள்பட, 20 பேர், மேட்டூர் ஸ்டேட் வங்கி முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரை மணி நேரத்துக்கு பின் கலைந்து சென்றனர்.