/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லாரி பேட்டரி திருட்டு டிரைவர்கள் 'வளைப்பு'
/
லாரி பேட்டரி திருட்டு டிரைவர்கள் 'வளைப்பு'
ADDED : ஜூன் 25, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் அன்னக்கரணிமணி, 54. புங்கவாடியை சேர்ந்தவர் குன்னையன், 45. இவர்களது லாரியை பழுதுபார்க்க, விநாயகபுரத்தில் உள்ள பட்டறையில், சமீபத்தில் விட்டுச்சென்றனர். நேற்று முன்தினம்
இரு லாரிகளில் இருந்த, 4 பேட்டரிகள் திருடுபோனது தெரிந்தது. உரிமையாளர்கள் புகார்படி ஆத்துார் டவுன் போலீசார் விசாரணையில், நரசிங்கபுரத்தை சேர்ந்த, லாரி டிரைவர் சரத்குமார், 32, ராமநாயக்கன்பாளையம், ஊத்துமேட்டை சேர்ந்த, நெல் அறுவடை வாகன டிரைவர் மணிகண்டன், 28, திருடியது தெரிந்தது. நேற்று, 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.