ADDED : மே 10, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கருப்பூர், எஸ்.எஸ்.ஆர்.எம்., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 123 பேரும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதனால், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.
இதில் மாயாவதி, 600க்கு, 589 மதிப்பெண்கள், மவுலீதரன், 583, சிவபிரசாத், 581 மதிப்பெண்கள் பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
கணிதம், கணினி அறிவியலில் தலா, 3 பேர், கணினி பயன்பாட்டியல், இயற்பியலில் தலா, 2 பேர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை, பள்ளி நிர்வாக தலைவர் ஆண்டியப்பன், செயலர் சண்முகம், பொருளாளர் பன்னீர்செல்வம், இயக்குனர் பூர்ணவேல், தலைமையாசிரியர் குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.