/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள்

ADDED : மே 10, 2025 01:26 AM
சேலம், சேலம் விநாயகா மிஷனின், விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி சார்பில் மாணவர்களின் பல்வேறு திறன்களை வெளிக்கொண்டு வர, சேலம் கான்பிடோ அமைப்பு மூலம், கல்லுாரி டீன் செந்தில்குமார் வழிகாட்டுதல்படி, இரு நாட்களாக போட்டிகள் நடத்தப்பட்டன.
விவாதம், குழு பாடல், வர்ணனை, குழு கட்டமைத்தல் சார்ந்த பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லுாரியின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த, முதலாம் ஆண்டு மாணவர்கள், தனித்திறமை, குழு ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தினர். அதன் நிறைவு விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கான்பிடோ அமைப்பின் நிறுவனர் சரவணபெருமாள் வரவேற்றார்.
கல்லுாரி டீன் செந்தில்குமார், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கினார். முடிவில் கான்பிடோ அமைப்பின் இயக்குனர் மதுமிதா நன்றி தெரிவித்தார். ஏற்பாட்டை, பேராசிரியர்கள் தமிழ் சுடர், கலைவாணி செய்திருந்தனர்.