/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாணவர்கள் நலனில் அக்கறை காட்டும் பள்ளி
/
மாணவர்கள் நலனில் அக்கறை காட்டும் பள்ளி
ADDED : ஜூன் 25, 2025 12:19 AM

திருப்புவனம் அரியவா மாண்டிசோரி பதின்ம மேல்நிலைப்பள்ளி மூத்த முதல்வர் எஸ்.கண்ணன் கூறுகையில்: அரசின் கல்வி திட்டத்தின் படி 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுத்தேர்வுகளில் 100 சதவிகித தேர்ச்சி பெற்று வருகிறது. பொதுத்தேர்வுகளில் 95 சதவிகித தேர்ச்சி பெறுபவர்களுக்கு கல்வி கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.
மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்கள் கல்லூரி படிப்பு குறித்து விளக்கமளித்து அதற்கு ஏற்ப நுழைவுத்தேர்விற்கான பயிற்சி, செஸ், கேரம், தடகளம் உள்ளிட்டவற்றிற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாணவ, மாணவியர் நலன்களிலும் அக்கறை கொண்டுள்ளோம், கல்வி தவிர உலகில் உள்ள படிப்பு, அதற்கு தயாராவது குறித்தும் கல்வி துறை நிபுணர்களை அழைத்து வந்து விளக்கமளித்து வருகிறோம், என்றார்.