/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
செட்டிநாட்டிற்கு பெருமை சேர்க்கும் செட்டிநாடு பப்ளிக் பள்ளி
/
செட்டிநாட்டிற்கு பெருமை சேர்க்கும் செட்டிநாடு பப்ளிக் பள்ளி
செட்டிநாட்டிற்கு பெருமை சேர்க்கும் செட்டிநாடு பப்ளிக் பள்ளி
செட்டிநாட்டிற்கு பெருமை சேர்க்கும் செட்டிநாடு பப்ளிக் பள்ளி
ADDED : ஜூன் 25, 2025 12:19 AM

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒவ்வொரு குழந்தையும் வாழ்க்கையில் சாதனையாளர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பள்ளி சேர்மன் எஸ்.பி குமரேசன் செயல்படுவதோடு துணை சேர்மன் அருண்குமாரும் அதே வழியில் செயல்பட்டு வருகிறார்.
பள்ளி சேர்மன் எஸ்.பி. குமரேசன் கூறுகையில்: இப்பள்ளி ஏ.சி., ஸ்மார்ட் கிளாஸ் ரூம், ஆய்வகங்கள், நூலகம் என பள்ளிக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் ஐ.எஸ்.ஓ., தரச் சான்று பெற்றுள்ளது.
இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதி உண்டு. பள்ளி முதல் செயல்பாடே யோகாவில் துவங்குகிறது. பேச்சு மொழி ஆங்கிலமாக இருப்பதால் மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுகிறார்கள். அமெரிக்கன் பீல்ட் சர்வீஸ் அமைப்பின் மூலம் வெளிநாட்டு மாணவர்களும் இங்கு தங்கிப் படிப்பதுடன் நமது கலாசாரத்தையும் கற்று செல்கின்றனர். மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் அமெரிக்கா சென்று வந்துள்ளனர்.
ஆண்டுதோறும், புகழ்பெற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். நேர்த்தியான அரங்கத்துடன், சிறந்த இசை கருவிகள் மூலமும் ஆசிரியர்கள் மூலமும் கற்பிக்கப்படுகிறது.
கிரிக்கெட் கைப்பந்து கால்பந்து கூடைப்பந்து பேட்மிண்டன் ஸ்கேட்டிங் கோகோ ஹாக்கி, செஸ் கேரம் டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளும், டேக் வாண்டோ, சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளும் கற்பிக்கப்படுகிறது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மேல் படிப்பை பற்றி அறிந்து கொள்ளவும், தங்களின் கருத்துக்களை கூறவும் கேரியர் டெவலப்மெண்ட் செல் செயல்படுகிறது.
இப்பள்ளிக்கு பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் இன்டர்நேஷனல் ஸ்கூல் விருது கிடைத்துள்ளது.
பள்ளியில் பயிற்று மொழி ஆங்கிலம் தவிர, தமிழ் ஹிந்தி சமஸ்கிருதம் பிரெஞ்சு மொழிகளும் கற்றுத் தரப்படுகிறது.
ஆங்கில பள்ளி ஆனாலும் தமிழுக்கு தனி மரியாதை வழங்கப்படுகிறது.
இப்பள்ளி 2017 ஆம் ஆண்டு முதல் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு மையமாக செயல்படுகிறது. பள்ளி முதலாவது ஆண்டு முதல் தொடர்ச்சியாக 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி அளித்து வருகிறது என்றார்.