ADDED : ஜூன் 25, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்; திருப்புத்துாரில் இந்திய கம்யூ., 25 வது ஒன்றிய மாநாடு நடந்தது.
நிர்வாகி அடைக்கலம் கொடியேற்றினார். ஒன்றிய குழு உறுப்பினர் நாச்சியப்பன் தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செயலாளர் முகமது ஜியாவுதீன் வரவேற்றார்.
மாவட்டச் செயலாளர் சாத்தையா துவக்கினார். ஒன்றிய செயலாளர் காளிமுத்து அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்டத் துணைச் செயலாளர்கள் மருது, கோபால், மாவட்ட விவசாய சங்க காமராஜர், மாவட்ட பொருளாளர் மணவழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருப்புத்துாருக்கு நகராட்சி அந்தஸ்து வழங்கவும், அரசு மருத்துவமனையில் இதய சிகிச்சை, அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவர், எலும்பு முறிவு மருத்துவர் நியமிக்க அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.