/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விவசாயிகள் அடையாள எண் பெற ஜூன் 30 வரை முகாமில் பதியலாம் கலெக்டர் தகவல்
/
விவசாயிகள் அடையாள எண் பெற ஜூன் 30 வரை முகாமில் பதியலாம் கலெக்டர் தகவல்
விவசாயிகள் அடையாள எண் பெற ஜூன் 30 வரை முகாமில் பதியலாம் கலெக்டர் தகவல்
விவசாயிகள் அடையாள எண் பெற ஜூன் 30 வரை முகாமில் பதியலாம் கலெக்டர் தகவல்
ADDED : ஜூன் 25, 2025 12:21 AM
சிவகங்கை; வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகள் விபரங்களை ஒருங்கிணைந்த தரவில் ஜூன் 30க்குள் பதிவேற்றி, அடையாள எண் பெற வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியுள்ளதாவது: விவசாயிகளின் முழு விபரங்களை வேளாண் தரவுகளில் பதிவேற்றம் செய்து, அதற்குரிய அடையாள எண்ணை பெற வேண்டும். இந்த அடையாள எண்ணை மையமாக வைத்தே இனி வரும் காலங்களில் மத்திய அரசு விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை வழங்க உள்ளது.
இது வரை 92,350 விவசாயிகள் மட்டுமே தங்கள் தரவுகளை பதிவேற்றம் செய்து, தனித்துவ அடையாள எண் பெற்றுள்ளனர். இன்னும் 73,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்யாமல் உள்ளனர்.
விவசாயிகள் தங்கள் விபரங்களை வேளாண், தோட்டக்கலை, விற்பனை, பொறியியல் துறை மற்றும் அனைத்து இ- சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யலாம். ஏற்கனவே பதிவு செய்து அடையாள எண் பெற்ற விவசாயிகள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்கள் அல்லது கிராமங்களில் பட்டாக்கள் வைத்திருந்தால், கூடுதல் நில விபரங்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும். நேரடி, கூட்டு பட்டா வைத்துள்ள அனைத்து விவசாயிகளும் பயன் பெறலாம். இப்பதிவினை மேற்கொள்ள ஆதார் எண், பட்டா, சிட்டா நகல், ஆதாருடன் இணைத்த அலைபேசி எண்ணுடன் முகாம்களில் பங்கேற்று பதிவு செய்யலாம்.
முன்னோர் பெயரில் பட்டா இருந்தால், அந்த பட்டாவை தங்கள் பெயருக்கு விவசாயிகள் மாற்றிய பின்னரே பதிவேற்றம் செய்ய முடியும்.
எனவே அடையாள எண் பெறாத விவசாயிகள், ஜூன் 30 க்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு 95977 71205 ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.