/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தீயணைப்பு நிலையத்திற்கு இடம் தேர்வு; நிதி ஒதுக்கி பணி துவங்காமல் இழுபறி

ADDED : ஜூன் 25, 2025 12:21 AM
காரைக்குடி; புதுவயலில் தீயணைப்பு நிலையம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டும் பணி துவங்காமல் உள்ளது.
புதுவயல் பேரூராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இப்பகுதியில் அதிக அரிசி ஆலைகள் உள்ளன. தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைக்க காரைக்குடி தீயணைப்பு நிலையத்திலிருந்து வாகனம் வர வேண்டியிருந்தது. 15 கி.மீ., தொலைவிலிருந்து தீயணைப்பு வாகனம் வருவதற்குள் பெரும் சேதம் ஏற்பட்டு விடுகிறது.
இதனால் புதுவயல் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு துவங்கப்பட்டு புதுவயலில் புதிய தீயணைப்பு நிலையம் தற்காலிக கட்டடத்தில் இயங்கி வருகிறது. புதிய தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு 1.50 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இடம் ஒதுக்கியதோடு சரி, புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெறவில்லை.
புதிய தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் பணி தொடங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தீயணைப்பு நிலைய அதிகாரிகள் கூறுகையில்: புதிய தீயணைப்பு நிலையத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் செயல் முறையில் உள்ளன என்றனர்.