/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஒப்பந்தகாரர்களுக்கு 4 கோடி ரூபாய் பாக்கி சிங்கம்புணரியில் வளர்ச்சி பணிகள் பாதிப்பு

ADDED : ஜூன் 25, 2025 08:40 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரி ஒன்றியத்தில் ஒப்பந்தக்காரர்களுக்கு 8 மாதமாக 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஒப்பந்த பணிகளுக்கான பணம் வழங்கப்படாததால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வொன்றியத்தில் 30 ஊராட்சிகளில் பல்வேறு திட்டங்களில் ஒப்பந்ததாரர்கள் பணிகளை எடுத்து செய்து வருகின்றனர்.
ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் 40க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகள் ஒதுக்கப்பட்டது.
கடந்தாண்டு ஆக., வரை நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கான பணம் வழங்கப்பட்ட நிலையில் கடந்த 8 மாதங்களாக எந்த பணமும் வரவில்லை.
பணிகளை முடித்து கொடுத்த ஒப்பந்ததாரர்களுக்கு 4 கோடிக்கும் அதிகமான பணம் வழங்கப்படாமல் உள்ளது.
இதனால் அடுத்த பணிகளை செயல்படுத்துவதற்கு நிதி இல்லாமல் ஒப்பந்தகாரர்கள் புலம்பி வருகின்றனர். பலர் வாங்கிய தொகைக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனால் ஒன்றியத்தில் அடுத்தடுத்து வரும் வளர்ச்சிப் பணிகளின் வேகம் குறைந்துள்ளது. ஏற்கனவே வேலை உறுதி திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 3000 கோடி ஒதுக்கிய நிலையில் அதன் மூலம் திட்டப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்கப்பட்டது.
அதே போல் இத்திட்டத்தில் பணிகளை முடித்து கொடுத்த தங்களுக்குரிய நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க ஒப்பந்தக்காரர்கள் வலியுறுத்தி உள்ளனர்.