/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.2,700 வசூல் விசாரணை நடத்த மக்கள் கோரிக்கை
/
குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.2,700 வசூல் விசாரணை நடத்த மக்கள் கோரிக்கை
குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.2,700 வசூல் விசாரணை நடத்த மக்கள் கோரிக்கை
குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.2,700 வசூல் விசாரணை நடத்த மக்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 25, 2025 08:40 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.2,700 வரை வசூல் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 445 கிராம ஊராட்சிகளில் 3 லட்சத்து 27 ஆயிரத்து 234 குடியிருப்புகள் உள்ளன. கிராம மக்களுக்கு வீடுகள் தோறும் 100 சதவீத குடிநீர் இணைப்பு வழங்க, ஜல்ஜீவன்' குடிநீர் இணைப்பு திட்டத்தை 2024 மார்ச் சில் இருந்து 2029 மார்ச் வரை அரசு நீட்டித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 3.27 லட்சம் குடியிருப்புகளில், 2020 வரை 57,742 வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை வேகப்படுத்தி அனைத்து வீடுகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 'ஜல்ஜீவன்' திட்ட நிதி, 15 மத்திய தொகுப்பு நிதி, ஊராட்சி உதவி இயக்குனர் உபரிநிதி, சிவகங்கை காவிரி கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
2021 முதல் 2024 வரை 1 லட்சத்து 62 ஆயிரத்து 228 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணியில் இது வரை 1 லட்சத்து 61 ஆயிரத்து 628 வீடுகளுக்கு இணைப்பு வழங்கியுள்ளனர்.
இன்னும் 60 ஆயிரத்து 396 வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டி உள்ளது.
வீட்டிற்கு ரூ.2,700 வசூலிப்பு
இத்திட்ட மதிப்பீட்டு தொகையில் 10 சதவீதம் மக்கள் பங்களிப்பாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மக்களிடம் குடிநீர் குழாய் இணைப்பிற்காக டெபாசிட் தொகை, குழாய்களுக்கான செலவின தொகையை வசூலிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இம்மாவட்டத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.2,000 டெபாசிட், குழாய் பொருத்தும் செலவாக ரூ.700 வீதம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து சிவகங்கை ஒன்றியம் அம்மச்சிபட்டி கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.
டெபாசிட் கேட்ககூடாது
ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி கூறியதாவது: வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தில் 10 சதவீத மக்கள் பங்களிப்பு தொகையை மக்களிடம் வசூலிக்க வேண்டும். ஆனால், டெபாசிட், குழாய் இணைப்பிற்காக கட்டணம் ஏதும் வசூலிக்க கூடாது. ஒப்பந்ததாரர்கள் மக்கள் பங்களிப்பு தொகையை மொத்தமாக கட்டிவிட்டு, வீடுகள் தோறும் குழாய் இணைப்பு கொடுத்த பின் வசூலித்திருக்கலாம். இது குறித்து விசாரிக்கப்படும், என்றார்.