/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பறவைகளிடம் இருந்து பயிரை காப்பாற்ற போராடும் விவசாயிகள்
/
பறவைகளிடம் இருந்து பயிரை காப்பாற்ற போராடும் விவசாயிகள்
பறவைகளிடம் இருந்து பயிரை காப்பாற்ற போராடும் விவசாயிகள்
பறவைகளிடம் இருந்து பயிரை காப்பாற்ற போராடும் விவசாயிகள்
ADDED : செப் 25, 2025 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி தாலுகாவில் ஒடுவன்பட்டி, பிரான்மலை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சிலர் போர்வெல் தண்ணீரை கொண்டு நெல் சாகுபடி செய்துள்ளனர்.
இப்பகுதியில் மயில் உள்ளிட்ட பறவைகள் அதிகம் உள்ள நிலையில் அவற்றால் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டு நஷ்டம் ஏற்படுகிறது. பறவைகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற வயல்களில் பாலிதீன் பைகளால் தோரணங்களை தொங்கவிட்டுள்ளனர். இத்தோரணங்களில் வெளிப்படும் ஒளி பிரதிபலிப்பால் பறவைகள் வயல் பக்கம் வராது என்கிறார்கள் விவசாயிகள்.