/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கொல்லம் -- கோயம்புத்துார் தினசரி எக்ஸ்பிரஸ் இயக்க வலியுறுத்தல்
/
கொல்லம் -- கோயம்புத்துார் தினசரி எக்ஸ்பிரஸ் இயக்க வலியுறுத்தல்
கொல்லம் -- கோயம்புத்துார் தினசரி எக்ஸ்பிரஸ் இயக்க வலியுறுத்தல்
கொல்லம் -- கோயம்புத்துார் தினசரி எக்ஸ்பிரஸ் இயக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 25, 2025 01:33 AM
சிவகங்கை:கொல்லம் -- கோயம்புத்துார் இடையே அருப்புக்கோட்டை, மானாமதுரை, மதுரை, பழநி வழியாக தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் வலியுறுத்தினர்.
ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் காங்., எம்.பி., கார்த்தியிடம் இதுகுறித்து வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கும், மதுரை -- விருதுநகர் இடையே திருப்புவனம், மானாமதுரை, நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை வழியாக தினமும் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும்.
கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, மதுரை, பழநி வழியாக கோயம்புத்துார் செல்ல ஏதுவாக தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வேண்டும். அதே போன்று ஈரோட்டில் இருந்து மதுரை, மானாமதுரை, பரமக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வேண்டும்.
புதிய ரயில் பாதை எப்போது:
நீண்ட காலமாக இழுபறியில் உள்ள மதுரை -- மேலுார் -- காரைக்குடி புதிய அகல ரயில் பாதை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்படுத்த வேண்டும். அதே போன்று மதுரை -- சிவகங்கை- - தொண்டி வழித்தடத்தில் புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். மதுரை - துாத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை வழியாக அமையும் புதிய ரயில் பாதையை விரைந்து முடிக்க வேண்டும். புதிய ரயில் பாதைகளை அமைத்து ரயில்கள் போக்குவரத்தையும் விரைந்து துவக்க வேண்டும் என கூறியுள்ளனர்.