/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு வேலை வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்
/
அரசு வேலை வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூன் 25, 2025 03:09 AM

சிவகங்கை: பள்ளத்துார் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியதில் பலியான ஊழியர் அர்ச்சுணன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரி சிவகங்கையில் டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
காரைக்குடி அருகே பள்ளத்துார் டாஸ்மாக் கடை பணியாளராக அர்ச்சுணன் 46, இருந்தார். 2023 மார்ச் 3 ம் தேதி மதுக்கடை மீது பெட்ரோல் பாட்டிலை வீசினர். இதில், மதுக்கடை தீப்பிடித்து அங்கிருந்த அர்ச்சுணனுக்கு பலத்த தீ காயம் ஏற்பட்டது. சிகிச்சை பலனின்றி அர்ச்சுணன் உயிரிழந்தார். இறந்தவர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்து, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்தார். அவரது குடும்பத்திற்கு இதுவரை அரசு வேலை வழங்க வில்லை.
இதை கண்டித்தும், அர்ச்சுணனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க கோரி நேற்று டாஸ்மாக் ஊழியர் (சி.ஐ.டி.யூ.,) சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் குமார் தலைமை வகித்தார்.
டாஸ்மாக் மாநில சம்மேளன தலைவர் முருகன், மாநில பொது செயலாளர் திருச்செல்வன், பொது செயலாளர் திருமாறன், பொருளாளர் ராஜ்குமார், சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் வீரையா, செயலாளர் சேதுராமன் பேசினர்.
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகிகளிடம் சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சிவக்குமார், தாசில்தார் சிவராமன் பேச்சு வார்த்தை நடத்தினர்.