/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி காதி பவனுக்கு நிர்வாகிகள், ஊழியர்கள் பூட்டு போலீசார் சமாதானம்
/
காரைக்குடி காதி பவனுக்கு நிர்வாகிகள், ஊழியர்கள் பூட்டு போலீசார் சமாதானம்
காரைக்குடி காதி பவனுக்கு நிர்வாகிகள், ஊழியர்கள் பூட்டு போலீசார் சமாதானம்
காரைக்குடி காதி பவனுக்கு நிர்வாகிகள், ஊழியர்கள் பூட்டு போலீசார் சமாதானம்
ADDED : மார் 25, 2025 09:51 PM

காரைக்குடி : காரைக்குடியில் செயல்பட்டு வரும் காதி பவனுக்கு நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மாறி மாறி பூட்டு போட்டதால் போலீசார் சமாதானம் செய்தனர்.
காரைக்குடி செக்காலை ரோட்டில் காரைக்குடி காதி பவன் செயல்பட்டு வருகிறது. சர்வோதயா சங்க நிர்வாகிகளுக்கும், ஊழியர்களுக்கும் நிர்வாகிகள் தேர்வு சம்பந்தமாக 2 ஆண்டுகளாக பிரச்னை நிலவி வருகிறது.
இது சம்மந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், மாவட்டத்தில் பல காதி பவன் கடைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. பூட்டு போடப்பட்டதால், வேலை செய்தவர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளதோடு, காதி கிராப்ட் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமம் அடைகின்றனர்.
இந்நிலையில் சர்வோதயா சங்க நிர்வாகிகள் காரைக்குடி காதி பவன் கடையின் பூட்டை உடைத்து, புதிய பணியாளர்களுடன் வியாபாரத்தில் ஈடுபட்டனர். பழைய சங்க உறுப்பினர்கள் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் நேற்று சங்க நிர்வாகிகள் போட்ட பூட்டை உடைத்து பல வருடங்களாக பணியில் இருந்த சங்க உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் புதிய பூட்டை போட்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீசாருக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர். இதில், ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் பி.எல்.ராமச்சந்திரன், சண்முகசுந்தரம் மற்றும் செல்வராஜ் அழகப்பன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.